Monday 5 December 2016

கடல் + காயல் = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-2

கடல் + காயல்  = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-2

       பெருமண் - பேழூம் துருத்து, காயல் பயணம் முடித்து கரை சேர்ந்ததும், நம்மை வரவேற்கிறது, பேளும் துருத்து தேவி கோவில் (மலையாள பாஷயில் "தேவி க்ஷேத்திரம்") கேரள பாணி  வடிவமைப்பில் எளிமையான தோற்றத்தோடு திகழ்கிறது, கொடிமரம், சுற்றுப்பிரகாரம், மரங்களின் நிழல்களோடு பசுமையாக உள்ளது. 

பேழும் துருத்து தேவி கோவில் 

Pezhum Thuruthu Devi Temple (Kshetram)

    கோவிலை பார்த்து முடித்ததும் மன்றோ துருத்து தீவை நோக்கி பைக்கை திருகினோம், வழியெங்கும் வெயில் விழாத சாலை, பார்க்கும் இடம் எல்லாம் சிறு, சிறு நீரோடை வாய்க்கால்கள், வானம் வளைக்கும், வளைந்த தெங்குகள், சிற்றோடையில் (இந்த காயல் தீரத்தில் மட்டுமே வளரும் கறி மீன் என்று அழைக்கப்படும்) வட்ட சிலேபி (Tilopia) மீன்கள், நம்மை கவரும் படி வருகின்றன, இயற்கையில் எழில்மிகு பரப்பில், மேகத்தோடு கூடிய காயலை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை, உங்கள் கேமரா, கேமரா மொபைல் போனில் முழுதும் சார்ஜ் செய்து செல்லுங்கள், போட்டோ எடுத்தே அதன் மொத்த சார்ஜ்ம் தீர்ந்துபோக வாய்ப்புள்ளது, எனவே நண்பர்களே போட்டோ எடுத்தே கலக்குங்க...

A View of Backwaters

காயல் அழகிய காயல் 

        மன்றோ தீவை சுற்றிலும், வசிக்கும் மக்களுக்கு தண்ணீருக்கு பஞ்சம் என்பதே இல்லை என்பது, இந்த காயலை பார்த்தே எண்ணிக்கொள்ளலாம், அதற்கென்று காயலில் உள்ள நீரை கை கொண்டு அள்ளி குடிக்கலாமா? என்று கேட்காதீர்கள், சில இடங்களில் நீர் உப்புக்கரித்து கிடக்கிறது, 

கோ இ பி போ (Goibibo)ஆப்பில் புக் செய்த ஹோட்டலை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமாக தான் இருந்தது, அச்சிரமத்தை குறைக்கும் முகமாய் தென்னந்தோப்புகள், சிற்றோடைகள் கண்ணுக்கு விருந்து அளித்ததால். சிரமம் தெரியவில்லை, app தேடிக்கொடுத்த  கொஞ்சம் வாடகை குறைந்த ஹோட்டலை தேர்வு செய்தோம், எங்கள் தேர்வு மிக அபாரமாய் அமைந்தது, அத்தனை எழில் கொஞ்சும் அழகையும் தன்னுள் அடக்கி வைத்து இயற்கையின் இருப்பிடமாய் திகழ்ந்தது ஹோட்டல், அதன் பெயர் "லேக் என் ரிவெர்" (Lake n River an SKB Resort)
 மேலதிக விவரங்கள் 
http://www.lakenriver.com/



       காயலின் கரை ஓரமாய், தென்னைமர தோப்பினுள், கொல்லம் நகரிலிருந்து சற்று தொலைவிலேயே அமைந்திருக்கின்றது, இந்த ரிசார்ட், தனித்தனி அறைகள், ஏசி- நான் ஏசி அறைகளும் (AC and Non-AC Rooms) உண்டு.. காலை சிற்றுண்டி, வை பை இன்டர்நெட், இலவசமாக (Morning Tiffin and Free Wi-Fi Internet)  வழங்குகிறார்கள், 
       ரிசார்ட்டின்  சிறப்பம்சம், குளு குளு காற்று, இயற்கை மரச்சூழல், காயலை முழுவதும் பார்க்கும் ஆனந்தம், மாலை வேளையில் கதிரவன் அடையும் காட்சி, கருக்கல் நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஷட்டில் கார்க் (அதாங்க பேட்மிண்டன் (Badminton) )  விளையாடலாம். இரவு உணவை முடித்து விட்டு, தென்னை மரங்களின் கட்டியிருக்கும் மென் கயிற்று (Soft Toined)  ஊஞ்சலில் ஆடிக்கொண்டே, காயலில் இருந்து  வீசும் தென்றலை தழுவிக்கொண்டு, ஹெட் போனில் (Maestro இளையராஜா, A.R. ரகுமான், வித்யாசாகர், தேவா, உங்களுக்கு பிடித்த) பாடல்களை  ஒலிக்க விட்டபடியே அண்ணாந்து வானத்தின் வின்மீன்களை எண்ணியபடியே கிடக்க, உறக்கம் சொக்கி தள்ளும்..

மென்கயிற்று ஊஞ்சல் கட்டப்பட்ட தெங்குகள், உடன் ரிசார்ட்  ( A view of  Lake N River Resort)

ராத்திரி உணவு, சப்பாத்தி முட்டைக்கறி குருமா.(Supper  Chappathi with Egg curry).

       காலை வேளையில் கதிரொளி காயலில் விழும் போது எழுந்து, பனித்துளி போர்த்தியிருக்கும் பச்சை புல்களின் மீது செருப்பின்றி நடப்பது  பாதங்களுக்கு, நம் மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும், உங்கள் கேமராவுக்கு அதிக ஒளிப்படங்கள் கிடைக்கும்..மிஸ் பண்ணிடாதீங்க..

ஒரு பொன் புலரி (An Early Morning Scene)



வான் தொடும் தெங்குகள் காலை பொழுது காட்சி
 விடியலுக்காக ஏங்கும் நதி வெள்ளம்  

இருள் விலக்கும் காலைக்கதிர் (Morning Sunrise in Munroe Island)

காயலில் ஒரு வள்ளம் ( a Small boat on Backwater)

          கொல்லம், மன்றோ துருத்து தீரங்களின், சிறப்பே வள்ளத்தில் போகும் பயணம் (Canoeing), ரெசார்ட்டில் அதற்கென தனி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, முடிந்தால் அதை முன்கூட்டியே புக் செய்து கொண்டு, வள்ளத்தில் பயணத்தை தொடலரம், காயலில் மீன்கள் பார்ப்பது, தெங்குகள் சூழ்ந்திருக்கும் நீரோட்டத்தில் செல்வது சூப்பரான அனுபவம்.. 

    நண்பர்களே.. இனி உங்கள் பயணம் கொல்லம் நோக்கி என்பது எனக்கு புரிகிறது...



A Bluesky view of  Munroe Island in Kollam

Coconut Tree with Backwater 


கண்களுக்கு சலிப்பு ஊட்டாத மன்றோ துருத்து தீரம் 
        ரெசார்ட்டில் தாங்கியவாறு, பல ஒளிப்படங்கள் எடுத்தும், காயலை ரசித்தும், காலை நேர பலகாரம்  (டிபன்) (எங்க நேரம்... பாம்பே ரவை உப்புமாவும் ..கடலை கறியும், அத்துடன் டீ ) தின்று விட்டு லேக் என் ரிவெர் ரெஸோர்ட்டில் இருந்து கிளம்ப தயாரானோம்... 

* கொல்லம் நகரில் பலதரப்பட்ட விலைகளில் தங்கும் விடுதிகள் உள்ளன, உங்களின் பட்ஜெட் தீர்மானித்து தங்கி கொள்ளலாம்,
* உங்களின் தாங்கும் விடுதியின் தரம் மற்றும் சேவையை அறிய இணையத்தை பயன் படுத்துங்கள் (புரோக்கர் கூறும் அறிவுரை கேட்டு ஏமாற வேண்டாம்)
* கொல்லம்- மன்ரோ தீவு கொல்லம் நகரில் இருந்து தொலைவில் அமைந்துள்ளதால், தங்கள் உணவை முன்னேற்பாடாய் முடித்து கொள்ளுங்கள், இல்லையெனில் பார்சல் வாங்கி வைத்துக்கொள்வது நலம்..
(தொடரும்)....

நேசமுடன் 
இளங்கோ கண்ணன் 


to be Continued
கடல் + காயல்  = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-3

1 comment:

  1. Welcome to Jammy Monkey - The official Jammy Monkey
    Welcome to Jammy 충청남도 출장마사지 Monkey - The official Jammy 경상남도 출장샵 Monkey · 2. Jammy Monkey · 3. Jammy Monkey · 상주 출장마사지 4. Jammy Monkey · 5. 김제 출장마사지 Jammy Monkey · 6. Jammy Monkey · 7. Jammy Monkey · 8. Jammy Monkey 김포 출장마사지

    ReplyDelete