Friday 9 December 2016

கடல் + காயல் = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-3

கடல் + காயல் = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-3

        ரெசோர்ட் நண்பருக்கு விடை கொடுத்து விட்டு, தோப்புகளுக்கு இடையில் செல்லும் சாலையோடு பைய.. பைய .. பைக்கை செலுத்தினோம்.. காலை 10 மணிக்கு வெயில் கொளுத்தியது (கேரளா தணுத்த பிரதேசம், வெயிலே தெரியாது அப்டி இருக்கும் கிளைமேட்-னு, யாராவது சொன்னா...! கண்டிப்பா அவங்கள போய் பாக்க சொல்லுங்க.. இப்போது  அங்கேயும் "ஹாட்" தான் மச்சி ) கொல்லம் நகரின் வெயிலின் சூடு நம்மை தாக்காமலிருக்க "தண்" என்ற  காற்று அவ்வப்போது வீசி நம்மை குளுமை படுத்துகிறது.

காயலின் மீது ஒரு சொகுசு படகு ( A Boat House on Backwater in Kollam)

       பைக் சென்ற ரோட்டில் தோரண வளைவுகள், கார், பைக் என்று ஆள் கூட்டம் அதிகமாயிருந்த ஒரு தோப்பிற்கு அருகில் வண்டியை நிறுத்தி பார்த்தபோது, அன்று ஒரு புது ரிசார்ட் உட்காடனம் அதாங்க திறப்பு விழா, ஏற்பாடு  நடந்து கொண்டிருந்தது, எங்களின் வருகையினை எதிர் பார்க்காத அம்மக்கள் வணக்கத்தோடு வரவேற்றனர், கேரளா நாட்டிளம் பெண்கள், வேட்டி கட்டிய சேட்டன் மார்களோடு அமர்களமாயிருந்தது ரிசார்ட் திறப்பு விழா, களைகட்டிய அவ்விழாவில் கலந்து,  அதை திறந்து வைக்க அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் கோவூர் குஞ்சு மோன்  வருகை தரவிருப்பதாக அங்கு கட்டப்பட்டிருந்த பதாகை தெரிவித்தது,

      உள்ளே செல்லும் போதே வெயில் சூட்டை தணிக்க  எலுமிச்சை கலந்த குளிர் பானம் (வெல்கம் ட்ரிங்க் (Welcome Drink) புது ருசியாய் இருந்தது,) கொடுத்தார்கள், மதிய உணவிற்க்காக மணமணக்கும் சிக்கன் பிரியாணி ரெடியாகிக் கொண்டிருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது நதிக்கரையோடு, கட்டப்பட்ட வீட்டை போல் அழகாக ரிசார்ட் அமைத்திருந்தனர், கேரளா அலங்காரம், செவ்வந்தி பூக்கள், அத்தப்பூ கோலம், பெரிய நிலை விளக்கு ஒளி வீச, சுற்றி நின்ற கேரளா  (இளம்)-பெண்கள் கூட்டம் என்று,   அம்சமாய் காட்சி அளித்தது, சுற்றிலும், தென்னை மரங்கள், நீரோட்டம் , என கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.. 

ரிசார்ட் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த எம் எல் ஏ கோவூர் குஞ்சு மோன் (முதல் வரிசை நீல சட்டை அணித்தவர்)

Resort Opening Ceremony by Mr. Kovoor Kunjumon MLA of Kerala Assembly (1st row Blue Shirted Person)

        மரங்கள் தந்த நிழல்களை ரசித்த வாறு நின்று கொண்டிருக்கும்போதே, எந்தவித ஆர்ப்பாட்டம், பந்தா இல்லாமலே திறப்பு விழாவிற்க்கு வருகை புரிந்தார் எம் எல் ஏ கோவூர் குஞ்சு மோன்( Mr. Kovoor Kunjumon MLA (Kerala), நம்மூர் எம் எல் ஏ (MLA)ஒரு சாதாரண விழாவிற்கு வருவதை நினைத்து பார்த்தபோது, நெஞ்சம் ஏங்கியது, கேரளா மாநில எம் எல் ஏ க்கள் எளிமையான தோற்றத்தோடும், அம்மாநில மக்களோடும் வெகு இயல்பாய் பழகியது வியப்பினை அளித்தது, பாதுகாப்பிறகு வந்தது  ஒரு போலீஸ் ஜீப் மட்டுமே, 

அது சரி அந்த ரிசார்ட் பெயரை சொல்லாம ?  .. ஏன் இப்டி இழுவை போடுற னு, சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது எனக்கு,
ரிசார்ட் பெயர் மற்றும் வலை தளம், "மன்றோ ஐலண்ட் லேக் ரிசார்ட்"               Munroe Island Lake Resort

ரிசார்ட் அமைந்துள்ள தென்னந்தோப்புகள் (பின்னால் தெரிவது தான் ரிசார்ட் )


தோப்புகளுக்கு மத்தியில் ஒரு சிறு நீர்குளம் (A View of a Small Pond)




வெண்மேகம் சூழ்ந்த வான் தொடும் தெங்குகள் 


தோப்பின் நீரோடைகளுக்கு மத்தியில் தென்னைகள் 


         காயல் பார்த்த மகிழ்விலும், புதிய ரிசார்ட், திறப்பு விழா நிகழ்விலும் கலந்து கொண்ட நிறைவிலும் பச்சை தென்னை மரங்களின் நிழலிலும், காயல் தரும் குளிர் இளம் காற்றிலும், மனதை பறிகொடுத்துவிட்டு, இயற்கையின் எழில் தந்த ஒளிப்படங்களை சுட்டுவிட்டும், கொல்லம் மன்றோ துருத்து தீவிற்கு விடை கொடுக்க தயாரானோம்...

A River View


Beauty of Backwater Kollam Munroe Island

BYE.. BYE...  Kollam- Munroe Island

* கொல்லம் மன்றோ துருத்து, நிகழ்வில் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செல்லுங்கள்..
* எங்கள் பயணத்தில் கொல்லம் கலங்கரை விளக்கம் (Kollam Light House), திருமுல்லா வரம் பீச் (Thiurmullavaram Beach), சாவரா (Chavara), , மேலும் துருத்து என்னும் பெயர் கொண்ட ஆற்றுத்தீவுகள்(கொல்லம் நகரை சுற்றிலும் பல ஆற்று தீவுகள் உள்ளன)  (Thuruthu means Island) பல இடங்களை பார்க்காமல்  விட்டுவிட்டோம், ஆகையால் அதை திட்டமிட்டு செல்லுங்கள்.
* மாதா அமிர்தானந்தா மயி அவர்களின் அமிர்தபுரி (Amrithapuri) கொல்லம் நகரில் இருந்து 15 கிமீ தொலைவிலேயே உள்ளது, முடிஞ்சா மறக்காம அங்கேயும் ஒரு விசிட் அடிச்சிருங்க மக்கா....!
* படகு பயணம் மற்றும் சுற்றுலா  தலங்களின் விவரம் அறிய கிளிக்குக 

* உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்..

நேசமுடன் 
இளங்கோ கண்ணன்.

2 comments: